சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் முதல் உள்துறை செயலாளர் அமுதா உட்பட 29 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பெற்றுள்ளார்கள்.
பணி மாற்றம்
இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலர் சிவதாஸ் மீனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி,
தமிழக உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ்., வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். புதிய சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிட்கோ மேலாண் இயக்குனராக இருந்த எஸ்.மதுமதி, பள்ளிக் கல்வித் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலராக இருந்த கே.கோபால், கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை செயலராகநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கே.வீரராகவராவ் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் ஹர்சகாய் மீனா, சிறப்பு முயற்சிகள் துறை செயலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உள் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதிவியில் இருந்த பி.அமுதா வருவாய்த் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய்த் துறை செயலராக இருந்த வி.ராஜாராமன் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போல தமிழகம் முழுவதும் மொத்தமாக 29 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.