இதை மட்டும் செய்யுங்க கால்ல கூட விழுறேன் - ஐஏஎஸ் அதிகாரியிடம் கெஞ்சிய நிதிஷ் குமார்

Bihar
By Karthikraja Jul 11, 2024 03:30 PM GMT
Report

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஐஏஎஸ் அதிகாரியின் காலில் விழச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார்

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 9 வது முறையாக நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.  

nitish kumar j p ganga path

பீகார் மாநிலம் பாட்னாவில் திகா மற்றும் திதர்கஞ்ச் இடையே கங்கை ஆற்றில் 21 கிலோமீட்டர் தூரத்திற்கு பாலம் காட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலத்துக்கு ஜே.பி. கங்கா பாதை என பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி பணிகள் முடிவடைந்த நிலையில், அந்தச் சாலைகளை அர்பணிக்கும் நிகழ்ச்சி பாட்னவில் நடைபெற்றது.

நிதிஷ்குமார்

இந்த நிகழ்ச்சியில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா ​​மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். 

j p ganga path inaguration nitish kumar

விழா மேடையில் பேசிய நிதிஷ் குமார், "இந்தாண்டு இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் உங்கள் காலில் கூட விழுகிறேன்" என பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு நின்று கொண்டிருந்த ஐஏஎஸ் அதிகாரியின் அருகில் செல்வார். அவரின் செயலை பார்த்து பதறிய அதிகாரி சில அடிகள் பின்வாங்கி., ‘ஐயா , தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்’ என கூறினார்.

இதை பார்த்த அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேஜஸ்வி யாதவ்

இந்த செயலுக்கு, “எந்த அதிகாரியோ, ஒப்பந்ததாரரோ நேர்மையாக பணி செய்யவில்லை என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் கைகளை கூப்பி பிச்சை எடுக்கக்கூடாது. என பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். 

பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் 10 மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இது தொடர்பாக 15 பொறியாளர்களை பீகார் அரசு, கடந்த ஜூலை 5ஆம் தேதி சஸ்பெண்ட் செய்தது.