தமிழகத்தின் முதல் பாஜக எம்.எல்.ஏ காலமானார் - தலைவர்கள் இரங்கல்

Tamil nadu BJP Death
By Karthick May 08, 2024 05:32 AM GMT
Report

தென்னிந்தியாவில் பாஜக சார்பில் முதலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியவர் சி.வேலாயுதம்

சி.வேலாயுதம்

பாஜகவை சேர்ந்தவரான சி.வேலாயுதம் கன்னியாகுமரியின் பத்மநாபபுர சட்டமன்ற தொகுதியில் இருந்து 1996-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர், 27,443 வாக்குகளை பெற்று திமுக வேட்பாளரான பாலா ஜனாதிபதியை பெற்ற 22,903 வாக்குகளை விட 4540 வாக்குகளை பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகினார்.

tamilnadu-1st-bjp-leader-mla-death

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் முதல் பாஜக வெற்றி வேட்பாளரும் இவரே. கன்னியாகுமரி பகுதி மக்களிடம் இவர் அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான ஆதரவு கோரி கையெழுத்து இயக்கத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. வயது மூப்பு காரணமாக சி.வேலாயுதம் இன்று காலை காலமானார்.

தலைவர்கள் இரங்கல் 

இது குறித்து, தமிழக பாஜகவின் அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த ஸ்வயம் சேவகரும், சமூக சேவகருமாகிய திரு.C.வேலாயுதம் அவர்கள் காலமானார்.

திமுக ஆட்சியில் காங்கிரஸ் கட்சி தலைவருக்கே இந்த நிலைமையா? கொந்தளிக்கும் அண்ணாமலை

திமுக ஆட்சியில் காங்கிரஸ் கட்சி தலைவருக்கே இந்த நிலைமையா? கொந்தளிக்கும் அண்ணாமலை

இவர், 1996 தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்ற வேட்பாளர் ஆவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மறைந்த சட்டமன்ற உறுப்பினர் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.