தமிழக முதல்வரின் அலுவலகத்தில் பொது தகவல் அதிகாரியிடம் பேரறிவாளன் மனு!

kill gandhi rajiv
By Jon Feb 17, 2021 07:27 PM GMT
Report

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன் இன்று தமிழக முதல்வரின் அலுவலகத்திற்கு பொது தகவல் அதிகாரியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது - கடந்த மாதம் 29ம் தேதி தமிழக ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் வழங்கிய கடிதத்தின் நகல் வேண்டும்.

மேலும், தனது கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுத்து, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய கடித நகல் வேண்டும். தன்னை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக ஆளுநர் எடுத்த முடிவின் நகலும் வேண்டும். அதுமட்டுமின்றி, கருணை மனுவுடன் சேர்த்து தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப முடிவெடுத்தது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் ஆளுநர் கருத்து கேட்டிருந்தால் அதுதொடர்பான நகல்.

தனது கருணை மனு தொடர்பாக தமிழக முதல்வர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பேரறிவாளன் அளித்த மனுவில், கடந்த 29-01-2021 தமிழக ஆளுநரை சந்தித்து முதல்வர் வழங்கிய கடிதத்தின் நகல். கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுத்த, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய கடித நகலின் விவரம்.

தன்னை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக தமிழக ஆளுநர் எடுத்த முடிவின் நகல். தனது கருணை மனுவுடன் சேர்த்து தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப முடிவெடுத்தது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் தமிழக ஆளுநர் கருத்து கேட்டிருந்தால் அது தொடர்பான நகல்கள் அனைத்தையும் தரும் படி அந்த மனுவியில் குறிப்பிட்டுள்ளார். தமிழக முதல்வர் அலுவலக பொது தகவல் அதிகாரியிடம் பேரறிவாளன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த மனுவை இன்று கொடுத்துள்ளார்.