அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு!

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Sumathi Jun 23, 2022 06:51 AM GMT
Report

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் தற்போது அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 பொதுக்குழு கூட்டம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது.

அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு! | Tamilmagan Hussain Is Currently Elected Chairman

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடிபழனிசாமி இருவரும் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வந்த நிலையில் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களுக்கு தனித்தனியே மரியாதை செலுத்தினர்.

 தமிழ்மகன் உசேன் 

அப்போது வேண்டாம் வேண்டாம் இரட்டை தலைமை வேண்டாம் என்று அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டனர் . அத்துடன் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு! | Tamilmagan Hussain Is Currently Elected Chairman

இதனால் ஓபிஎஸ் தரப்பு தொண்டர்கள் சற்று கலக்கம் அடைந்தனர். இந்த சூழலில் அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது என அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

 ஒருமனதாக தேர்வு

இதையடுத்து அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைவராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய, ஜெயக்குமார் வழிமொழிந்தார். இதன் மூலம் தற்காலிக அவைத் தலைவராக இருந்த நிலையில் தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

காதலியை புதைத்து அருகிலேயே தூக்கில் தொங்கிய காதலன்!