அதிமுக பொதுக்குழு கூட்டம் - பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக சி.வி.சண்முகம் ஆவேசம்
ஒற்றைத் தலைமை
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்தது. இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது.
பொதுக்குழுவுக்கு வந்த ஓபிஎஸ் - இபிஎஸ்
இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வானகரம் மண்டபத்தை வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து முதல் ஆளாக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தடைந்தார். இதனையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியும் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தடைந்துள்ளார்.
சி.வி.சண்முகம்
பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அப்போது, “இரட்டை தலைமையால் சரியான எதிர்க்கட்சியாக அதிமுகவால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மேடையில் ஆவேசமாக பேசினார்.
#WATCH | Tamil Nadu: AIADMK's General Council meeting underway at Shrivaaru Venkatachalapathy Palace, Vanagaram in Chennai.
— ANI (@ANI) June 23, 2022
Former CM Edappadi K Palaniswami, former Deputy CM O Panneerselvam and other leaders of the party are present at the meeting. pic.twitter.com/rXAxByN8Fn