உதயநிதிக்கு ஏற்றம்..துரைமுருகனுக்கு ஏமாற்றம்; மாற்றத்தின் போது தெரியும்- தமிழிசை தாக்கு!

Udhayanidhi Stalin M K Stalin Smt Tamilisai Soundararajan Tamil nadu DMK
By Swetha Sep 24, 2024 09:00 AM GMT
Report

அமைச்சரவை மாற்றம் துரைமுருகனுக்கு ஏமாற்றமாக இருக்கும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம்.. 

தற்போதெல்லம் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கும்போது, ஒவ்வொரு முறையும், 'அமைச்சரவை மாற்றம் இருக்குமா, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி எப்போது' என்ற கேள்வி தவறாமல் கேட்கப்படுகிறது.

உதயநிதிக்கு ஏற்றம்..துரைமுருகனுக்கு ஏமாற்றம்; மாற்றத்தின் போது தெரியும்- தமிழிசை தாக்கு! | Tamilisai Talks About Dmk Cabinet Re Shuffle

அதற்கு முதல்வர் ஸ்டாலின் அளிக்கும் பதிலால் தி.மு.க.,விலும், உதயநிதி ஆதரவாளர்கள் தரப்பிலும் எதிர்பார்ப்புகள் கிளம்புவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில்,

அண்மையில் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்தபோது, அமைச்சரவை மாற்றம் குறித்து கேட்கபட்ட கேள்விக்கு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்பதுதான். இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி - வெளிப்படையாக பதிலளித்த ஸ்டாலின்

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி - வெளிப்படையாக பதிலளித்த ஸ்டாலின்


தமிழிசை 

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் பேட்டி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பதிலளித்து வருகின்ற இந்த வரிசையில் பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசையும் இதற்கு பதில் அளித்துள்ளார்.

உதயநிதிக்கு ஏற்றம்..துரைமுருகனுக்கு ஏமாற்றம்; மாற்றத்தின் போது தெரியும்- தமிழிசை தாக்கு! | Tamilisai Talks About Dmk Cabinet Re Shuffle

இது தொடர்பாக அவர் கூறியதாவது, யார் ஏமாற போகின்றனர் என்பது அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும். முதல்வர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும்,

உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும். தி.மு.க.,வில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா? என்று தெரிவித்துள்ளார்.