பத்துப்பாட்டு கேட்ட கூட்டம் குத்துப்பாட்டு ரசிக்கிறது.. மறுவினாலும் மாறக்கூடாது - தமிழிசை பேச்சு!

Smt Tamilisai Soundararajan Puducherry
By Vinothini Aug 15, 2023 07:55 AM GMT
Report

கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழிசை கலாச்சாரம் குறித்து பேசியுள்ளார்.

கலைவிழா

புதுச்சேரியில் கலை மற்றும் பண்பாட்டுத்துறையும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் கலைவிழா கடற்கரைச் சாலை காந்தி திடலில் நேற்று தொடங்கியது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முரசு கொட்டி விழாவினைத் தொடங்கி வைத்தார்.

tamilisai-spoke-about-tamil-culture

மேலும், இதில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், போக்குவரத்து மற்றும் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அரங்கம் அதிர பேசினார்.

தமிழிசை உரை

இந்நிலையில், அவர் பேசுகையில், "பாரதியாரின் கவிதை, பாரதிதாசனின் நாடகங்கள், பல தேசிய உணர்ச்சிமிக்க பாடல்கள் எல்லாம் நமக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தது. தாலாட்டு முதல் ஒப்பாரி வரை வாழ்க்கை என்றாலே கலை தான். வாழ்க்கை பாட்டில் ஆரம்பித்து பாட்டில் முடிகிறது. குழந்தைக்கு ஏன் தாலாட்டு பாடப்படுகிறது.

tamilisai-spoke-about-tamil-culture

நோய்களுக்கு இசை மருந்தாக இருக்கிறது. அறுவை சிகிச்சை நடக்கும் போதும் நடந்து முடிந்த பிறகும் நோயாளிகளுக்கு இசை ஒளிபரப்பப்படுகிறது. இதன்மூலம் நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்புவது விரைவாக நடைபெறுகிறது. அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் புண் இசையின் மூலமாக சீக்கிரம் குணமாகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியில் கண்டறிந்து இருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல் ரத்தக் கொதிப்பு, தைராய்டு, ஆஸ்துமா போன்ற சிக்கலுக்கும் ஒவ்வொரு ராகத்தின் மூலம் குணப்படுத்த முடியும். பத்துப்பாட்டை கேட்டு ரசித்த தமிழர் கூட்டம் குத்து பாட்டையும் ரசிக்கிறது. கலை மறுவி மறுவி வந்தாலும் அடிப்படை கலாச்சாரம் மாற்றப்பட.க கூடாது" என்று கூறினார்.