மாரடைப்பால் பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம் - தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி

actorlittlejohndhanasekaran actorlittlejohn RIPlittlejohn
By Petchi Avudaiappan Apr 06, 2022 02:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபல காமெடி நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் காலமான சம்பவம் தமிழ் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள படைவீடு அல்லிநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தனசேகரன் என்கிற லிட்டில் ஜான் என்பவர் வெங்காயம், ஐம்புலன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். 

மாரடைப்பால் பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம் - தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி | Actor Little John Dhanasekaran Passed Away

43 வயதான இவர் சுமார்  3 அடி உயரம் உள்ள நிலையில் படவாய்ப்புகள் இல்லாத சமயங்களில் கிராமங்கள் தோறும் கோவில் திருவிழாக்களின் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில்  திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் லிட்டில் ஜான் கலந்துக் கொண்டார். 

நிகழ்ச்சி முடிந்து தூங்க சென்ற அவர் மறுநாள் காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது மூக்கு மற்றும் காதில் இரத்தம் வழிந்த நிலையில் அசைவற்று கிடந்த லிட்டில் ஜானை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லிட்டில் ஜானின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான அல்லிநாயக்கன் பாளையத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு லிட்டில் ஜான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.