தமிழக சொகுசு கப்பலுக்கு புதுச்சேரியில் அனுமதி தரவில்லை - ஆளுநர் தமிழிசை

Smt Tamilisai Soundararajan Tamil nadu
By Nandhini Jun 06, 2022 11:07 AM GMT
Report

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சொகுசு கப்பல்

தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 700 அடி நீளம், 11 தளங்கள், 796 அறைகளுடன் பல்வேறு வசதிகளை கொண்ட சொகுசு கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கட்டணங்களை பொறுத்தவரை தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்யும் எனவும், ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 அடுக்கு கொண்ட சொகுசுக் கப்பலில் 10 உணவகங்கள், பார்கள், ஸ்பா, கடைகள் உள்ளிட்டவை கப்பலில் இடம்பெற்றுள்ளன. இந்த சொகுசு கப்பல் திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். இதற்கான விலை தனியார் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. சுமார் 22 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை இந்த சொகுசு கப்பலில் பயண திட்டமாக உள்ளது.

தமிழக சொகுசு கப்பலுக்கு புதுச்சேரியில் அனுமதி தரவில்லை - ஆளுநர் தமிழிசை | Tamilisai Soundararajan Tamilnadu

ஆளுநர் தமிழிசை 

இந்நிலையில், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி தர இல்லை. அப்படியே சொகுசு கப்பலை அனுமதித்தாலும் கலாச்சார சீர்கேடு இல்லாமல் அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.