என் அன்புக்குரிய தங்கை தமிழிசைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், "தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநரும், எப்போதும் என் அன்புக்குரிய தங்கையுமான தமிழிசை சவுந்திரராஜனுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், தமிழிசை சவுந்திரராஜனுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது 62வது அகவையில் அடியெடுத்து வைக்கும் தெலுங்கான மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான மருத்துவர் @DrTamilisaiGuv அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்நன்னாளில் அவர் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தனது 62வது அகவையில் அடியெடுத்து வைக்கும் தெலுங்கான மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான மருத்துவர் @DrTamilisaiGuv அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்நன்னாளில் அவர் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்!
— O Panneerselvam (@OfficeOfOPS) June 2, 2022