வேளச்சேரியில் பாலம் எதற்கு? பாலம் நிறுத்தவா..கொதித்த தமிழிசை செளந்தரராஜன்

M K Stalin Smt Tamilisai Soundararajan DMK
By Sumathi Mar 14, 2025 06:25 PM GMT
Report

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் குறித்து தமிழிசை செளந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் 

2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூரில் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

tamilisai soundararajan - stalin

அப்போது பேசுகையில், பழைய ஓய்வூதிய திட்டம், மாதாந்திர மின் கட்டண முறை, சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்று ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தலித் மாணவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு வருகின்றனர்.

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல்; இறங்கிய ED - அமைச்சரை நீக்க அரசுக்கு கோரிக்கை!

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல்; இறங்கிய ED - அமைச்சரை நீக்க அரசுக்கு கோரிக்கை!

தமிழிசை விமர்சனம்

வேங்கைவயல் பிரச்சனையில் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. வேளச்சேரியில் ரூ.300 கோடிக்கு பாலம் கட்டவுள்ளார்களாம். எதற்காக வேளச்சேரியில் மீண்டும் பாலம் கட்டப்படுகிறது?

வேளச்சேரியில் பாலம் எதற்கு? பாலம் நிறுத்தவா..கொதித்த தமிழிசை செளந்தரராஜன் | Tamilisai Soundararajan Say Dmk Govt Budget Failed

எல்லோரும் சென்று கார் நிறுத்துவதற்கா? ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு மழை நீர் வடிவால் பணிகளே முழுமையாக செய்யவில்லை. இந்த சூழலில் இன்னொரு பாலம் கட்டப்போகிறார்களாம்.

அது பார்க்கிங் பாலமாக மாறப் போகிறது. தமிழ்நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளே இல்லை. புதிய திட்டங்களே எதுவும் இல்லை. இதனிடையே 100 இடங்களில் லைவ் ரிளே வேறு செய்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.