டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல்; இறங்கிய ED - அமைச்சரை நீக்க அரசுக்கு கோரிக்கை!

Tamil nadu TASMAC Enforcement Directorate
By Sumathi Mar 14, 2025 06:35 AM GMT
Report

 டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

 டாஸ்மாக் நிறுவனம்

தமிழக அரசின் டாஸ்மாக் (தமிழ் நாடுமாநில வாணிபகழகம்)நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் பல்வேறு முறை கேடுகள் நடைபெறுவதாகவும்,

senthil balaji

இதில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரி வர்த்தனை நடந்துள்ளதாகவும் அம லாக்கத்துறைக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில், சென்னை எழும்பூரில் உள்ள தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம்,

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுபான கிடங்கு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு, அலுவலகங்கள், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் அக்கார்டு மதுபான உற்பத்தி நிறுவனம், எஸ்என்ஜெ, கால்ஸ், எம்ஜிஎம் உள்ளிட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள்,

தமிழகத்தில் இந்தியை திணிப்பது திமுகதான் - தமிழிசை அதிரடி!

தமிழகத்தில் இந்தியை திணிப்பது திமுகதான் - தமிழிசை அதிரடி!

அமலாக்கத்துறை அறிவிப்பு

அதன் ஆலைகள் என சென்னை, கரூர், கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை உட்பட தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

enforcement directorate

இந்நிலையில், டாஸ்மாக் நிறு வனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அம லாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தொடர் பான சட்டவிரோத விவகாரங்களில் டாஸ்மாக் நிறுவனம், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள்,

டாஸ்மாக் ஊழியர்கள், மற்றும் இதில் தொடர்புடைய பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் ஊழலுக்குக் காரணமான மதுவிலக்குத் துறையின் இன்றைய அமைச்சர் செந்தில்பாலாஜி,

முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.