2026 தேர்தலில் திமுக கூட்டணி நிலைக்காது -ஆனால்.. ட்விஸ்ட் வைத்த தமிழிசை!
கவரைப்பேட்டை ரயில் விபத்தை அரசியல் ஆக்குவது ஏன் என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழிசை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்த போது மதுரை விமான நிலையத்தல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர் திமுக அரசு சென்னை, மதுரை, திருச்சி,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு தயார் செய்வதில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. மழைக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை உதயநிதி உருவாக்குகின்றார்.
திமுக அரசு விளம்பர அரசாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசியவர் விமான சாகசத்தில் உயிரிழந்ததை அரசியலாக்கக் கூடாது என்று கூறும் திமுக அரசு கவரைப்பேட்டை ரயில் விபத்தை அரசியல் ஆக்குவது ஏன் என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
விளம்பர அரசு
குறிப்பாக மெரினாவில் வான் சாகசத்தில் உயிரிழந்த சம்பவம்போல பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தால் நிச்சயம் ஸ்டாலின் முதலில் குரல் கொடுத்திருப்பார்.
தற்பொழுது பொதுமக்களும், திமுகவின் கூட்டணி கட்சிகளுமே திமுகவிற்கு எதிராக திரும்பியுள்ளனர். நிச்சயமாக 2026 தேர்தலில் இதே திமுக கூட்டணி நிலைக்காது என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.