தமிழிசை சவுந்தரராஜன் திடீர் கைது - மறுத்ததால் பரபரப்பு!
தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்மொழி கொள்கை
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
தமிழிசை கைது
சமக்கல்வி இணையதளம், சமக்கல்வி பாடல் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டன. தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் சென்னை எம்ஜிஆர் நகரில் இன்று கையெழுத்து இயக்கம் நடத்தினார்.
தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்தியதால் தமிழிசை சவுந்தரராஜனை போலீசார்கைது செய்தனர். மேலும், அனுமதியுடன் மற்றொரு நாள் கையெழுத்து இயக்கத்தை நடத்துங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதனை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரின் வாகனத்தில் ஏறவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.