திமுகவின் உண்மையான பொய் முகம் கிழித்தெரியப்பட்டிருக்கிறது - தமிழிசை காட்டம்!

Smt Tamilisai Soundararajan DMK Social Media
By Swetha Jun 29, 2024 02:24 AM GMT
Report

செங்கோல் விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக பொய் முகம்

மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழாவில் ஆதீனங்களுடன் சென்று சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோலை பிரதமர் நிறுவினார். ஏற்கனவே இதற்கு ல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன.

திமுகவின் உண்மையான பொய் முகம் கிழித்தெரியப்பட்டிருக்கிறது - தமிழிசை காட்டம்! | Tamilisai Slams Dmk On Sengol Issue

அதேபோல நடப்பு நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த முறையும் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் மன்னராட்சியின் அடையாளமான செங்கோல் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் வைக்கப்பட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சியினர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘செங்கோல் என்பது கொடுங்கோலின் சின்னம் கிடையாது’ ‘செங்கோல் என்பது மக்களாட்சியின் சின்னம்’ எந்த தமிழ் அரசரும் மக்கள் ஆட்சி மீறி ஆட்சி நடத்தவில்லை

செங்கோல்; தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரி இந்தியா கூட்டணி...யோகி ஆதித்யநாத் கண்டனம்!

செங்கோல்; தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரி இந்தியா கூட்டணி...யோகி ஆதித்யநாத் கண்டனம்!

தமிழிசை காட்டம்

இது தமிழ் மண்ணின் நீதி தவறாமல் ஆட்சி நடப்பது என்பதற்கு ஆன குறியீடு தான் செங்கோல். பாராளுமன்றமும் அப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாரதப் பிரதமர் அதை நிறுவினார். கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு

திமுகவின் உண்மையான பொய் முகம் கிழித்தெரியப்பட்டிருக்கிறது - தமிழிசை காட்டம்! | Tamilisai Slams Dmk On Sengol Issue

இந்த செங்கோலின் தன்மையும் புனிதத்துவமும் தெரியாது என்பதை அவர்கள் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள். செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது அரசியலுக்காக எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

சமாஜ்வாதி கட்சியை சார்ந்தவர்கள் எதிர்க்கலாம். ஆனால் நம் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் எதிர்க்கலாமா?திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான பொய் முகம் இன்று கிழித்தெறியப்பட்டிருக்கிறது. தமிழும்…. தமிழ் கலாச்சாரமும் அவர்களின் அரசியலுக்காக தான் அவர்களின் உணர்வுகளுக்காக அல்ல!’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்