செங்கோல்; தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரி இந்தியா கூட்டணி...யோகி ஆதித்யநாத் கண்டனம்!
செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் தமிழில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்
இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. 'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது.
குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில்
இந்தியா கூட்டணி
செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது, தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலை, சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பிரதமர் மோடி நிறுவினார்.
இந்த நிலையில், சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் இருப்பது மன்னராட்சியின் அடையாளம் என்றும், ஜனநாயகத்தை காக்க அதனை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அரசியல் சாசனம் புத்தகத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி கோரிக்கை வைத்தது குறிப்பிடத்