திமுக, காங்கிரஸ் வெற்றி பெற்றதில் எந்த பயனும் இல்லை - தமிழிசை சவுந்தர்ராஜன் காட்டம்!
தேர்தலில் திமுக காங்கிரஸ் வெற்றி பெற்றது பயனில்லை என தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
தமிழிசை சவுந்தர்ராஜன்
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை முடிவடைந்தது. அதில், தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது.பல்வேறு குழப்பங்களுக்கு அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராக உள்ளார். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
அதிமுக மற்றும் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சிக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது , திரணியில் இருந்துகொண்டு தமிழக மக்களுக்கு கிடைக்கவேண்டியதை கிடைக்கவிடாமல் செய்கிறார் ஸ்டாலின்.
பயன் இல்லை
அதிமுக – பாஜக கூட்டணி வைத்திருந்தால் வரக் கூடிய கணக்கு பற்றி சொல்லப்படும் தகவல்கள் வேறு வேறு மாதிரி திசை திருப்பப்படுகிறது. பாஜகவுடன் சேர்ந்தாலே தோற்றுதான் போகமுடியும் என சொல்லிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம்,
தற்போது பாஜகவும் சேர்ந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என சொல்வதை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன்.நாங்கள் மக்களுக்காக பணியாற்றுவோம். நான் எதையும் எதிர்பார்த்து கட்சியில் இல்லை. எனக்கு கட்சி கொடுக்கிற அங்கீகாரத்தை ஏற்று பணியாற்றி வருபவள்.
தமிழ்நாட்டில் பாஜக அதிகமாக வாக்குகள் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் இடங்கள் கிடைக்கவில்லை என்பதை எல்லா தொண்டர்களையும் போலவே கவலையாக பார்க்கிறேன் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை விட, எந்த பலனும் இல்லாமல் காங்கிரஸுக்கும், திமுகவிற்கு அதிக இடம் கிடைத்திருக்கிறது என்பதுதான் கவலை என்றார்.