ஊழலுக்காக, கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக.. அம்பேத்கர் பற்றி பேசுவது நியாயமா?தமிழிசை சரமாரி கேள்வி!

M K Stalin Smt Tamilisai Soundararajan Tamil nadu
By Vidhya Senthil Dec 20, 2024 04:48 AM GMT
Report

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் அம்பேத்கர் பற்றி திமுக பேசுவது நியாயமா எனக் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பேத்கர் 

விஞ்ஞானபூர்வமாக ஊழல் பட்டம் பெற்றவர்கள் திமுகவினர். சர்க்காரியா கமிஷன் அமைத்து ஊழலுக்காக, கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, திமுக ஆட்சிதான்.

திமுக தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து பாவங்களைச் சேர்த்துக் கொண்டது.

tamilisai

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், அவர்களது குடும்பத்தினரின் பாவத்தையும் திமுக சேர்த்துள்ளது. வேங்கைவயலில் மனித கழிவு கலந்த தண்ணீரை ஊர் மக்கள் குடித்து பெரும் இன்னலுக்கு ஆளான நிலையில்,

ஆட்சியில் இருக்கிறோம் என்கின்ற ஆணவம்? தமிழிசை கடும் கண்டனம்!

ஆட்சியில் இருக்கிறோம் என்கின்ற ஆணவம்? தமிழிசை கடும் கண்டனம்!

இன்றளவும் யார் அதை செய்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் ஊர் மக்களின் பாவத்தை வாங்கிக்கொண்டதும் திமுகதான். இப்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் அம்பேத்கர் பற்றி திமுக பேசுவது நியாயமா. ‘

தமிழிசை

சென்னையில் ரூ.4,000 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைத்து விட்டோம்’ என்று கூறிக்கொள்ளும் திமுக, மழைக்காலங்களில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் பாவங்களையும் வாங்கிக் கொண்டது.

amit shah controversy speech in parliment

ஊழல் செய்வதையே குடும்ப தொழிலாக்கி, ஏழை, எளிய மக்களின் பாவங்களை சேர்த்த, நிர்வாக திறனற்ற திமுகவை 2026 -ல் வீட்டுக்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு புண்ணியம் எனத் தெரிவித்துள்ளார்