தூர்தர்ஷன் இருக்கட்டும் - சன் டிவி எப்போ மாத்த போறீங்க - தமிழிசை கேள்வி

M K Stalin Smt Tamilisai Soundararajan
By Karthick Apr 22, 2024 04:44 AM GMT
Report

தூர்தர்ஷன் சேனலுக்கு காவி சாயம் பூசப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தமிழிசை பதிலடி

முக ஸ்டாலினின் இந்த கண்டனத்திற்கு முன்னாள் ஆளுநரும், தென் சென்னை நாடாளுமன்ற பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவில்,

அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற சமஸ்கிருத பெயர் வைப்பதா என்ற கேள்வி கேட்கும் திரு.ஸ்டாலின் அவர்களே.... ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்திருந்தே உள்ளது.

எப்போது உங்கள் குடும்ப தொலைக்காட்சியான சன் டிவி என்ற ஆங்கில பெயரை தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்? DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளார்கள்.

இத கூட மாத்திட்டாங்க - அனைத்திற்கும் காவியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

இத கூட மாத்திட்டாங்க - அனைத்திற்கும் காவியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

காவி என்பது தியாகத்தின் வண்ணம்.... நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி... அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே...என குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் கண்டனம்

முன்னதாக தூர்தர்ஷன் சேனலுக்கு வண்ணம் மாற்றப்பதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் , உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;

வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;


பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்; தற்போது #Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை.

இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்! என நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.