இத கூட மாத்திட்டாங்க - அனைத்திற்கும் காவியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

M K Stalin DMK BJP Narendra Modi Lok Sabha Election 2024
By Karthick Apr 21, 2024 06:35 AM GMT
Report

நாட்டின் அனைத்திற்கும் காவி சாயத்தை பாஜக பூசுவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டித்துள்ளார். 

பதிவு 

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு வருமாறு,

உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;

தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;

வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;

பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;

தற்போது #Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!

mk-stalin-kaavi-comment-bjp-doordarshan-channel

தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!

மக்களவை தேர்தல்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெறு முடிந்துள்ள நிலையில், ஜூன் 4-ஆம் தேதி தான் ஓட்டு எண்ணும் பணி நடைபெறுகிறது. நாட்டில் 7 கட்டமாக நடைபெறும் தேர்தல் முதல் கட்டம் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

எனக்கு எதிராக வெளிநாட்டில் தீட்டப்படும் திட்டம் - பிரச்சாரத்தில் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு!!

எனக்கு எதிராக வெளிநாட்டில் தீட்டப்படும் திட்டம் - பிரச்சாரத்தில் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு!!

10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்திட தீவிரம் காட்டி வருகின்றது. அதே நேரத்தில், இந்தியா கூட்டணி பாஜகவிற்கு முடிவுரை எழுத பெரும் முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றது.

mk-stalin-kaavi-comment-bjp-doordarshan-channel

நாட்டின் 2வது விடுதலை போராட்டம் இது என பகிரங்கமாக கூறும் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் தேர்தல் பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளது.