உங்க பெயர் தமிழ் இல்லையே ஸ்டாலின்; மாற்ற தயாரா? தமிழிசை தாக்கு!
மு.க.ஸ்டாலின் தனது பெயரை மாற்றிக் கொள்ள தயாரா? என தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொருளாதார ஆய்வறிக்கை
தமிழ்நாடு பட்ஜெட்டை நாளை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக தமிழ்நாடு அரசு தரப்பில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ரூபாய் குறியீட்டிற்கு ₹-க்கு பதிலாக தமிழ் எழுத்தான "ரூ" பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில்,
தமிழிசை கேள்வி
திமுகவினர் முதல்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்களா என்ன? அவர்களுக்கு எப்போதும் மற்றவர்கள் பேசும் போதுதான் தமிழர்கள் பற்றியும், தமிழையும் பற்றியும் நினைவுக்கு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் பெயரை மாற்றிக் கொள்ள தயாரா? தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று அனைவரையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அவர் பெயரை மாற்றிக் கொண்டு சட்டப்பேரவைக்கு வரட்டும். தேசிய ஒருமைப்பாட்டிற்கே இவர்கள் குந்தகம் விளைவித்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்படுவதற்கு நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல. தமிழ்க் குழந்தைகளை வஞ்சித்து கொண்டு தமிழை பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள்.
தமிழை படிக்காமல் படிக்க முடிக்க கூடிய சூழல் இங்கு உள்ளது. 50 ஆயிரம் குழந்தைகள் மொழி பாடத்திட்டத்தை எழுதவே வரவில்லை. தமிழர்களின் பெருமையை இவர்களின் பெருமையை போல் பறைசாற்றி கொண்டிருக்கிறார்கள். தேசிய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவித்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.