தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 - முக்கிய அம்சங்கள் என்ன?
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-ஐ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 13) வெளியிட்டார்.
பொருளாதார ஆய்வறிக்கை
> 2021-22-ல் இருந்தே 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தமிழ்நாடு தொடர்ந்து எட்டி வருகிறது. 2025-25லும் 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
> தமிழ்நாடு 2023-24 ஆம் ஆண்டில் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது. 2023-24ல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது. பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71% ஆகவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33% ஆகவும் உள்ளது.
> தமிழகத்தின் தனிநபர் வருமான வளர்ச்சியானது தொடர்ந்து பல ஆண்டுகளாக தேசிய சராசரியைவிட அதிகமாகவே இருந்து வருகிறது. 2022-23ல் ரூ.2.78 லட்சமாக இருந்தது; இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தைக் காட்டிலும் 1.64 மடங்கு அதிகமானதாகும். இதன் காரணமாக தனிநபர் வருமானத்தில் தமிழகம் 4ம் இடம் வகிக்கிறது.
> 2023-24ல், சேவைத் துறையானது மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக்கூட்டலில் (ஜிஎஸ்விஏ) 53.63% பங்களித்தது; அதற்கடுத்து இரண்டாம் நிலைத் துறை (33.37%), முதன்மைத்துறை (13%) பங்களித்துள்ளன.
> தமிழ்நாட்டில் 2022-23-ல் 6% என்றிருந்த சில்லறை வர்த்தகப் பணவீக்கம், 2023-24ல் 5.4% ஆகவும், 2024-25ல் (ஜனவரி 2025 வரையில்) 4.8% ஆகவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 2019-20ல் 6% என்றிருந்த நகர்ப்புர பணவீக்கம் 2024-25-ல் (ஜனவரி 2025 வரையில்) 4.5% ஆகக் குறைந்துள்ளது.
> மொத்த பயிரிடப்பட்ட பரப்பளவில் நெல், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, தினை வகைகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் 62% ஆகவும், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி போன்ற உணவு தானியமல்லாத பயிர்கள் 38% ஆகவும் உள்ளன.
> தமிழக விவசாயிகளுக்கு பட்டியலிடப்பட்ட வணி வங்கிகள் வாயிலாக வழங்கப்படும் கடன் 2019-20ல் ரூ.1.83 லட்சம் கோடியிலிருந்து, 2023-24ல் ரூ.3.58 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
> 2024-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 14.55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
> 2019-20 முதல் 2023-24 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு வர்த்தக வங்கிகள் அளித்துள்ள கடன் ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு ரூ.5,909 கோடியிலிருந்து ரூ.20,157 கோடியாக அதிகரித்துள்ளது.
> 2005-06 முதல் 2022-23 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் வறுமை நிலை (ஹெச்சிஆர்) 36.54%-லிருந்து வெறும் 1.43% என வெகுவாக குறைந்துள்ளது.
> சமூகத் துறைக்கான செலவினங்களை தமிழக அரசு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2019-20ல் ரூ.79,859 கோடியாக இந்த ஒதுக்கீடு, 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1.16 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது, என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

CWC 6: அரிவாளுடன் வந்து குக்குகளை மிரள விட்டு புகழ்- 90 நிமிடத்தில் டாஸ்க்கை முடித்தவர் யார்? Manithan
