அமைச்சர் பிடிஆருக்கு கேக் ஊட்டிய தமிழிசை செளந்தரராஜன் - ஒரே ஆச்சர்யம்!
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தமிழிசை கேக் வெட்டி ஊட்டிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வந்தே பாரத்
சென்னை - திருநெல்வேலி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கொடியசைத்து திறந்து வைத்தார். திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும்
வந்தே பாரத் ரயில் 7 மணி 50 நிமிடங்களில் 652 கி.மீ தூரத்தை கடந்து சென்னையை மதியம் 1:50 மணிக்கு சென்றடையும். விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
சென்னையில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு நெல்லையை வந்தடையும். இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், தெலுங்கானா ஆளுநரும்,
புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்து அந்த ரயிலேயே பயணம் செய்தனர். தொடர்ந்து மதுரையில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மேலும், கேக் வெட்டி தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டினார்.
அதேபோல, பாஜக பொதுச்செயலாளர் பேராசியர் ராம.சீனிவாசன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கேக்கை ஊட்டிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.