அரசியலும் ஆன்மீகமும் பிரிந்து இருப்பதே ஜனநாயகத்திற்கு நல்லது- அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
அரசியலும் ஆன்மீகமும் பிரிந்து இருப்பதே ஜனநாயகத்திற்கு நல்லது என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்
மதுரை ஆதீனம் மறைவிற்கு முதல்வர் அறிவித்ததின் பேரில் மதுரை ஆதீன மடத்திற்கு வந்து அவருக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தியுள்ளோம்.
தனிப்பட்ட முறையில் 290 ஆவது ஆதீனம் அருணகிரிநாதருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நல்ல உறவு உள்ளது. ஆதீனம் என்னிடம் மிகுந்து பாசம் கொண்டவர் என்பதால் இவரின் மறைவு தனிபட்ட விதத்தில் பெரும் இழப்பு தான்.
நாளை சுதந்திர தின விழாவில் கலைஞர் பெற்றுத்தந்த சுயமரியாதையின் அடிப்படையில் முதல் முறையாக கோட்டையில் முதல்வர் கொடியேற்றும் விழாவில் பங்கேற்க உள்ளோம்.
பண்பாட்டு, கலாச்சார அடையாளமாகவும் முழுமரியாதையும், ஊக்குவிக்கும் கட்சியாக திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகிறது தொடர்ந்து இருக்கும் என்றார்.
மதுரை ஆதீனத்திற்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர் அரசு மரியாதை குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
குறிப்பாக அரசியலையும், ஆன்மீகத்தையும் கலக்க கூடாது,அடிப்படை வரைமுறையில் அரசியலும் ஆன்மீகமும் பிரிந்து இருப்பதே ஜனநாயகத்திற்க்கு நல்லது என பேசினார்.