கல்வியில், அரசியலைக் கலப்பது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது - தமிழிசை!

M K Stalin Smt Tamilisai Soundararajan DMK
By Vidhya Senthil Oct 25, 2024 02:46 AM GMT
Report

 கல்வியில், அரசியலைக் கலப்பது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்களின் 223-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் படத்திற்குத் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அணிவித்து மரியாதை செலுத்தினார்.

tamilisai

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,’’தமிழகத்தில் ஆளுநரின் நிகழ்ச்சியை அமைச்சர்கள் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறார்கள். சாதாரண நிகழ்ச்சியிலோ, பொது நிகழ்ச்சியிலோ ஆளுநர் கலந்து கொண்டால் அதைப் புறக்கணித்தால் பரவாயில்லை.

இந்த போட்டிகள்தான் தமிழ்நாட்டின் ஒலிம்பிக் - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

இந்த போட்டிகள்தான் தமிழ்நாட்டின் ஒலிம்பிக் - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

ஆனால், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளை அமைச்சர்கள் புறக்கணிப்பது நல்லதல்ல. பட்டமளிப்பு விழா என்பது அரசியலையும் தாண்டி நடைபெறும் நிகழ்வு. பட்டம் பெறும் மாணவர்களை, நல்வழிப்படுத்துவதற்கு அமைச்சர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருக்க வேண்டும் என்று கூறினார்.

 வாடிக்கை

தொடர்ந்து பேசிய அவர் எனவே, பட்டமளிப்பு விழாவைப் புறந்தள்ளுவது சரியல்ல. கல்வியில், அரசியலைக் கலப்பது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது. இது போன்று இனி செய்யக்கூடாது.

R.N.Ravi

புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பிரதமரின் அனைத்து புதிய கல்வித் திட்டங்களையும், துணை வேந்தர் நியமனம் என எல்லாவற்றையும் அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.