கங்கையில் ஒருநாள் தமிழன் கொடி பறக்கும்; கனிமொழி சூளுரை - அலறிய அரங்கம்!
கங்கையில் ஒருநாள் தமிழன் கொடி பறக்கும்! கனிமொழி சூளுரைத்துள்ளார்.
கீழடி தொல்லியல் ஆய்வு
பெஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேசன் சிந்தூர் குறித்து மக்களவையில் இரண்டாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பங்கேற்று திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க எம்.பி.க்கள் குழுக்களை அமைத்த மத்திய அரசு, அந்த குழுக்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பியது.
அந்த குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மீது நம்பிக்கை வைத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜம்மு - காஷ்மீரில் நீங்கள் (மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா) பல மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக இந்த அவையில் கூறினீர்கள்.
கனிமொழி ஆவேசம்
ஆனால், RAW உள்ளிட்ட மத்திய உளவு அமைப்புகள் தோல்வியடைந்து விட்டதை தான் பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் உணர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் கங்கைகொண்ட சோழபுரம் வந்துச் சென்றுள்ளார்.
தேர்தல் வருவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு தமிழ் கலாச்சாரம், பாரம்பரியத்தின் மீது அக்கறை, ஆர்வம் வந்து விடுகிறது. ஆனால், தமிழர்களின் வரலாற்று பெருமையை உணர்த்தும் கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகளை மட்டும் வெளியிட மத்திய அரசு மறுப்பது ஏன்?
கங்கையை கொண்ட சோழன் என்பதையே கங்கைகொண்ட சோழபுரம் என்ற ஊர் பெயர் உணர்த்தி நிற்கிறது. தமிழன் கங்கையை வென்றான்; வெல்வான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றித் திரியும் வெள்ளை யானை ஜோடி : பார்க்க படையெடுக்கும் சுற்றுலாதாரிகள் IBC Tamil
