பிரபல தமிழக வீரருக்கு திருமணம் முடிந்தது: வெளியான கலக்கல் புகைப்படம்
dhoni
sports
rohit
virat
By Jon
இந்திய அணி வீரரான விஜய் சங்கர் வைஷாலியைத் திருமணம் செய்துள்ளார். 2019 ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் இந்திய அணிக்காக 12 ஒரு நாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்.
வைஷாலி விஸ்வேஸ்வரனுடன் தனக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதைக் கடந்த ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்கள் வழியாக விஜய் சங்கர் உறுதிப்படுத்தினார்.
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விஜய் சங்கர் விளையாடி உள்ளார். இந்நிலையில் வைஷாலியை விஜய் சங்கர் திருமணம் செய்த தகவலை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளியிட்டிருக்கிறது. ட்விட்டரில் திருமணப் புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.
