வீரப்பனின் கட்சி கொடியை மாற்றம் செய்தாரா விஜய்? தடைசெய்யப்பட்ட சர்ச்சை கொடிகள் இதுதான்!
நடிகர் விஜய் தனது கட்சிக் கொடியில் பயன்படுத்தியுள்ள நிறங்கள் தமிழ் நாட்டின் முந்தைய அரசியலில் சர்ச்சை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய்
2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார்.அப்போது 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என்று தெரிவித்து இருந்தார் . தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாட்டிற்கான பணிகள் என அடுத்தடுத்து விறுவிறுப்பு காட்டி வந்தார் .
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 22) ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள த.வெ.க கட்சியின் அலுவலகத்தில் தலைவர் விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தினார் . பொதுவாக , எந்த அரசியல் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினாலும் அதற்குப் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கும். அந்த வகையில், விஜய்யின் த.வெ.க கட்சிக் கொடிக்குப் பின்னாலும் ஓர் அர்த்தம் இருக்கிறது.
சிகப்பு நிறக் கொடியில், இரு யானைகள் பீறிட்டு நிற்க, அதற்கு நடுவே வாகை மலரைச் சுற்றி 28 நட்சத்திரங்கள் இருப்பது போல அந்தக் கொடியில் வரைபடங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இவை இந்தியாவின் 28 மாநிலங்களைக் குறிப்பதாக உள்ளது என்றாலும் 5 நட்சத்திரங்கள் பெரிது படுத்திக் காட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியைப் போல் தமிழக அரசியலிலிருந்துள்ளது. இதற்கு இரண்டு உதாரணங்கள் உள்ளது.
தமிழ்நாடு விடுதலைப்படை:
தமிழ்நாடு விடுதலைப்படை என்பது இந்தியா மற்றும் இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இந்திய அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். இந்தக் கட்சியின் கொடியில் மஞ்சள் ,சிவப்பு,4 நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது.
இதே போல் 1990 களில் தமிழ்நாடு விடுதலைப்படை உள்ள மஞ்சள் ,சிவப்பு,4 நட்சத்திரங்களைச் சேர்ந்து ஏறுதழுவுதல் உள்ளிட்டவை மாறுதல்ப் படுத்தி தமிழ்நாடு பொதுவுடைமை கட்சிக் கொடியை வீரப்பன் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு பொதுவுடைமை கட்சி என்னும் கம்யூனிஸ இயக்கத்தின் ஆயுதப் பிரிவு.
இந்த அமைப்பின் நோக்கம், இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதுதான்.
இந்தச் சூழலில் நடிகர் விஜய் தனது கட்சிக் கொடியில் பயன்படுத்தியுள்ள நிறங்கள் தமிழ் நாட்டின் முந்தைய அரசியலில் சர்ச்சை ஏற்படுத்தியது என்றாலும் வரக்கூடிய நாட்களில் த.வெ.க கட்சி பேசக்கூடிய அரசியல் என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.