த.வெ.க கொடியை அறிமுகப்படுத்திய விஜய் - அமைச்சர் உதயநிதி கொடுத்த ரிப்ளை!
தமிழக வெற்றிக் கழக கட்சியின் பாடலை இன்னும் பார்க்கவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
த.வெ.க கொடி
சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை பாரிமுனையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள, ‘கலைஞர் நூற்றாண்டு கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டப் பெண்களுக்குத் தொடக்கக்கல்வி மட்டுமின்றி உயர்கல்வியும் தங்குதடையின்றிச் சென்று சேர உழைத்தவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அமைச்சர் உதயநிதி
திராவிட மாடல் அரசின் ‘புதுமைப்பெண்’களாகத் திகழும் மாணவிகளின் எதிர்காலம் சிறக்க என்றும் துணை நிற்கும் என்று கூறினார். தொடர்ந்து நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் தலைவருமான விஜய் கொடியை அறிமுகப்படுத்தி கட்சி பாடலை வெளியிட்டுள்ளார் .
இதைப் பார்த்தீர்களா என அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர் ,'' நான் நிகழ்ச்சியில் இருந்ததால் த.வெ.க கொடி பாடலை இன்னும் பார்க்கவில்லை . பார்த்து விட்டுச் சொல்கிறேன் என்று கூறினார். மேலும் , தன் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய விஜய்க்கு எனது வாழ்த்துகள் தெரிவித்தார்.