ஐசியூவில் 6 மாத சிகிச்சை..நேத்ரன் திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் நேத்ரன்
சின்னதிரையில் மருதாணி,ரஞ்சிதமே உள்ளிட்ட சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன். இவரது நடிப்பு எனத் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.டான்ஸர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர்.
மேலும் ரியாலிட்டி ஷோக்களில் அதிகமாகப் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.சின்னதிரையில் 25 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள். திருமணத்துக்குப் பிறகு மனைவி தீபா நடிப்பதை நிறுத்தி விட்ட நிலையில், நேத்ரன் மட்டுமே நடித்து வந்தார்.
புற்றுநோய்
கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மிகவும் ஒல்லியாக மாறிப்போனார்.அவருக்குப் புற்றுநோய் இருப்பதாக அவரது மகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து தீவிர சிகிச்சையிலிருந்த அவர் , விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிபார்க்கபட்ட நிலையில்,நேற்று நேத்ரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்புச் செய்தி தமிழ் சின்னதிரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.