நயன்தாரா வெளியிட்ட ரீல்ஸ்.. கேரளாவில் வெடித்த சர்ச்சை - மீண்டும் மீண்டுமா?
நடிகை நயன்தாரா வெளியிட்ட ரீல்ஸ் ஒன்று கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நயன்தாரா
நடிகை நயன்தாராவின் திருமணம் குறித்த ஆவணப்படம் நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் 'Nayanthara: Beyond the Fairytale' என்ற தலைப்பில் வெளியானது.
இந்த ஆவணப்படத்தில் தனுஷின் 'wunderbar films' தயாரிப்பு நிறுவனத்தில் வெளியான விக்னேஷ் சிவன் இயக்கி நயன்தாரா நடித்திருக்கும் 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் சில காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் 3 நிமிட காட்சிகளைப் பயன்படுத்த தனுஷிடம் NOC கேட்டும், அவர் தரவில்லை.
அதுமட்டுமில்லாமல் 3 நிமிட காட்சிகளைப் பயன்படுத்தியதற்கு தனுஷ் தரப்பில் ரூ.10கோடி கேட்கப்பட்டது. இதற்கு நயன்தாரா கடும் விமர்சனத்தை முன் வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தது. கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரீல்ஸ்
இதனையடுத்து நடிகர் தனுஷ் நயன்தாராவுக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா வெளியிட்ட ரீல்ஸ் ஒன்று கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் நடிகை நயன்தாரா குறிப்பிட்ட ஒரு பிராண்டை ஊக்குவிப்பதைப் அந்த ரீல்ஸிசை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் இடம்பெற்ற இசை தொடர்பாக அனுமதி பெறவில்லை எனப் புகார் எழுந்தது. இசைக்கு உரிமையாளரான இசையமைப்பாளர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதாவது ஒரு படத்தின் இடம்பெற்ற பாடலை அனுமதி பெறாமல் பன்னாட்டு நிறுவனத்தின் பொருளை விளம்பரம் செய்வதற்காகப் பயன்படுத்திய குற்றம் என்று கேரள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.