இவர் தான் அவரோ? வருங்கால கணவர் குறித்து போட்டுடைத்த நடிகை ராஷ்மிகா!
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது வருங்கால கணவர் குறித்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா
கன்னடத்தில் 2016-ம் ஆண்டு வெளியான க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா நடிகையாக சினிமாவில் அறிமுகமானார் . இந்த படம் வசூல் ரீதியாகவும் , விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது . அதனைத் தொடர்ந்து அஞ்சானிபுத்ரா, சமக் ஆகிய கன்னட படங்களில் நடித்தார் .
அதன் பிறகு தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களது கேமிஸ்ரி ரசிகர்களைக் கவர்ந்தது. தொடர்ந்து டியர் காம்ரேட் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.
குறுகிய காலத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார்.மேலும் தெலுங்கு, கன்னட, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. 3 படங்களில் ஒன்றாக நடித்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கள் பரவி வந்தது.
வருங்கால கணவர்
ஆனால் அதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது . இந்த நிலையில் புஷ்பா 2 ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா தனது வருங்கால கணவர் குறித்து பேசியுள்ளார். 2021-ம் ஆண்டு புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 5-ந் தேதி புஷ்பா படத்தின் 2-ம் பாகம் புஷ்பா தி ரூல் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன், சாவா, சிக்கந்தர், குபேரா, ராஷ்மிகா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது உங்கள் வருங்கால கணவர் திரைத்துறையைச் சேர்ந்தவரா அல்லது எந்த துறையைச் சேர்ந்தவர் என்று நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி கேள்வி எழுப்பினார் . அதற்கு அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் என்று ராஷ்மிகா சிரித்தபடி கூறியுள்ளார்.தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.