முகத்தை பார்த்துலாம் ரொமான்ஸ் வராது; அப்படி ஆண் வேஸ்ட் - பிரபல நடிகை பளீச்!
ஒரு பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்ளும் ஆண் அழகு என நடிகை மான்யா தெரிவித்துள்ளார்.
நடிகை மான்யா
பிரபல வானத்தைப் போல சீரியலின் மூலம் ரசிகர்களை தன் பக்க =ம் இழுத்தவர் துளசியாக வலம் வரும் மான்யா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ”தமிழில் மட்டும் தான் பெண்கள் ‘ரக்கெட்டா’ நடிக்க முடியும். வேறு மொழிகளில் அப்படி நடிக்க முடியாது.
தமிழ் பெண்கள் என்றாலே மாஸ் தான். சன் டிவி மாதிரி ஒரு முன்னணி சேனலில் என்னுடைய சீரியல் வருகிறது என்று தெரிந்ததும், நான் அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். வந்த முதல் நாளே என்னை இது ரொம்ப சின்ன பொண்ணா இருக்க என்று கூறினார்கள்.
ஆணின் அழகு
உண்மையில் நான் சின்னப்பொண்ணு தான். இப்ப தான் நான் 25 வயதில் அடியெடுத்து வைக்கிறேன். ஆனால், என்னுடையே கேரக்டரை பார்த்து 30 தாண்டியதாக நினைக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் முகத்தை பார்த்து தான் பெண்கள் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்றால், அழகில்லாத ஆண்களுக்கு கல்யாணமே நடந்திருக்காது.
அழகு என்பது முகத்தில் இல்லை. ஒரு பெண்ணை நன்றாக பார்த்துக் கொண்டால், அது தான் ஆணின் அழகு. அந்த குணமில்லை என்றால் அழகா இருந்தாலும் அந்த ஆண் வேஸ்ட் தான்.’’ எனத் தெரிவித்துள்ளார்.