‘மயக்கம் என்ன?’ பட நடிகைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது!
நடிகை ரிச்சா கங்கோபாத்யாய்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் சில மாதங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும், எங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்றும் மகிழ்ச்சியுடன் கடந்த பிப்ரவரி மாதம் சமூகவலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
அவர், கர்ப்பமாகி 7 மாதங்கள் வரை யாருக்கும் இந்த விஷயத்தை சொல்லவில்லை. நடிகை ரிச்சா செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன?’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்னர் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஒஸ்தி’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். பின்னர் நடிப்பை கைவிட்டு, வெளிநாட்டிற்கு சென்று படிப்பை ஆரம்பித்தார்.
இதனையடுத்து, நடிகை ரிச்சா 2019-ம் ஆண்டு தனது காதலர் ஜோ லங்கலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவம் என இருமுறைகளிலும் நடந்தது.
இந்நிலையில் ரிச்சா- ஜோ லங்கலா ஜோடிக்கு கடந்த மே 27-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இது குறித்து ரிச்சா தனது டுவிட்டர் பக்கத்தில், எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவன் ஆரோக்கியமாக இருக்கிறான். பார்ப்பதற்கு அப்பாவைப் போலவே இருக்கிறான். நீ எங்கள் வாழ்க்கையை விவரிக்க முடியாத மகிழ்ச்சியால் நிரப்பிவிட்டாய்.” என்று ரிச்சா பதிவிட்டுள்ளார்.
இந்தத் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளதையடுத்து சமூகவலைத்தளத்தில் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.



50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan