கர்ப்பிணி மனைவி சித்ரவதை - படப்பிடிப்பில் நடிகர் அர்ணவ் கைது

Chennai Serials Tamil Nadu Police
By Sumathi 5 மாதங்கள் முன்

நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில், சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவி சித்ரவதை

சின்னத்திரையின் செவ்வந்தி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா. அதனைத் தொடர்ந்து தற்போது மகராசி சீரியலில் நடித்து வரும் அவர், விஜய் டிவியின் செல்லம்மா தொடரில் நடித்து வரும் நடிகர் அர்ணவுடன் இணைந்து நடித்தார்.

கர்ப்பிணி மனைவி சித்ரவதை - படப்பிடிப்பில் நடிகர் அர்ணவ் கைது | Tamil Serial Actor Arnav Arrest Wife Complaint

அப்போது இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் சேர்ந்து வாழந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டார்.

நடிகர் புகார்

இந்நிலையில், தற்போது கர்ப்பிணியாக இருக்கும் நடிகை திவ்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது காதல் கணவர் அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்தார். மேலும் தனது கரு எப்போது வேண்டுமானாலும் கலையலாம், என்று கூறி

கர்ப்பிணி மனைவி சித்ரவதை - படப்பிடிப்பில் நடிகர் அர்ணவ் கைது | Tamil Serial Actor Arnav Arrest Wife Complaint

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா தனது கணவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2 வீடியோ பதிவுகளை வெளியிட்டார். இந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த அர்ணவ் திவ்யா மீது புகார் அளித்தார்.

இந்நிலையில், திவ்யா அளித்த புகாரின்பேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அர்ணவ்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. தொடர்ந்து அர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிலையில், அவர் ஆஜராகவில்லை. அதனையடுத்து பூவிருந்தவல்லி அருகே நேமம் பகுதியில் படப்பிடிப்பில் இருந்த அர்ணவ்வை போலீஸார் கைது செய்தனர்.   

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.