மாணவர்களுக்கு மாதம் ரூ1000; தமிழ்புதல்வன் திட்டம் எப்பொழுது தொடக்கம்? முதல்வர் அறிவிப்பு
தமிழ்புதல்வன் திட்டம் தொடங்கப்படும் தேதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதில் அவர் பேசியதாவது, எவ்வளவு வேலைகள் இருந்தாலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறையேனும் கொளத்தூர் தொகுதிக்கு வந்துவிடுவேன். கொளத்தூருக்கு வந்தாலே ஒரு புது எனர்ஜி கிடைத்துவிடும்.
அறநிலையத்துறை
கொளத்தூர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதி தான். எந்த கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும் சரி, அவர்களது கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
1,400க்கும் மேற்பட்ட கோயில்களில் திமுக அரசு குடமுழுக்கு நடத்தி இருக்கிறது. ரூ.5000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்டுள்ளோம், கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கியுள்ளோம். அறநிலைய துறை சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. இறைப்பணி மட்டுமல்லாமல், கல்விப் பணியும் செய்து, அறநிலையத்துறை, அறிவுத்துறையாகவும் செயல்படுகிறது என பேசினார்.
தமிழ் புதல்வன்
மேலும், சாதி, மதம், பொருளாதாரம், சமுதாய சூழல்கள் ஒருவரின் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. கல்வி தான் ஒருவரிடமிருந்து திருட முடியாது சொத்து. புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2,73,000 மாணவிகள் பயன் பெறுகின்றனர். அதே போல் மாணவர்கள் பயன் பெறும் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவையில் ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கி வைக்கிறேன் என பேசியுள்ளார்.
புதுமைப்பெண் திட்டம் கீழ் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். இதே போல் மாணவர்களும் பயன்பெறும் வகையில், தமிழ் புதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்கு, இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாணவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். இதற்காக சமீபத்தில் தமிழக அரசு ரூ.401 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டது.