எங்களை போன்றோரை தமிழக மக்கள் அங்கீகரிப்பதில்லை - தமிழிசை ஆதங்கம்

Smt Tamilisai Soundararajan Tamil nadu Coimbatore
By Sumathi Feb 21, 2023 05:45 AM GMT
Report

திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிப்பதில்லை என தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கோவையில் ப்ல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "மாநிலங்களுக்கு நியமிக்கப்படும் ஆளுநர்கள் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரால் பரிசீலனை செய்யப்பட்டு, அதன்பின் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

எங்களை போன்றோரை தமிழக மக்கள் அங்கீகரிப்பதில்லை - தமிழிசை ஆதங்கம் | Tamil Peoplw Fails Recognize Talented Tamilisai

தமிழக மக்களால் எங்களை போன்றோரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்க முடியவில்லை. எனவே, மத்திய அரசு திறமையான நல்லவர்களை அடையாளம் காண்டு ஆளுநராக நியமித்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். மக்கள் எங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியிருந்தால் எங்களை மத்திய மந்திரி ஆக்கியிருப்பார்கள்.

ஆதங்கம்

தமிழக மக்கள் நல்லவர்களை தயவு செய்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள். எங்களைப் போன்றவர்கள் நிர்வாக திறமை உள்ளவர்கள். மக்கள் திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.பணியாளர்கள் வட இந்தியாவில் இருந்து வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை சிந்தனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடம் கேளுங்கள். நான் ஒரு ஆளுநர் என்பதால் இது தொடர்பாக கருத்து கூற முடியாது" எனத் தெரிவித்தார்.