விழுந்து விழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது - கீழே விழுந்தால் பெரிய செய்தியாக வருகிறது ஆளுநர்

Smt Tamilisai Soundararajan Chengalpattu
By Thahir Feb 20, 2023 02:05 AM GMT
Report

செங்கல்பட்டு மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திடீரென்று கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

செயற்கைகோள் ஏவும் நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநர் 

மாமல்லபுரத்திற்கு அருகிலுள்ள பட்டிபுலம் கிராமத்தில் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டானது இந்தியா முழுவதும் உள்ள 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் வருகைத் தந்தனர்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனை 

இந்நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடந்து வரும்பொழுது கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

tamilisai-soundararajan-exaggerates-what-fell-down

இதனையடுத்து வெளிவந்த செய்திகளை கவனித்த ஆளுநர் தமிழிசை, நான் விழுந்து விழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது. ஆனால், நான் கீழே விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சிகளில் வருகிறது என்று கூறியுள்ளார்.

நன்மைகளை செய்ய ஆரம்பித்தால் நாட்டிற்கு ஆளுநரும் எதற்கு, ஆட்டிற்கு தாடியும் எதற்கு என பேச ஆரம்பித்து விடுவார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் மேலும் கூறியுள்ளார்.