முதல்முறையாக வருகிறது 10 வழி சாலை; அதுவும் தமிழகத்தில்.. என்னென்ன சிறப்பம்சங்கள்!

Tamil nadu Chennai
By Sumathi Sep 26, 2024 08:00 AM GMT
Report

10 வழி சென்னை அவுட்டர் சாலையின் பணிகள் நிறைவடையவுள்ளது.

பெரிஃபெரல் ரிங் ரோடு

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 132.87 கிமீ தூரத்திற்கு சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு அமைக்கப்படவுள்ளது.

முதல்முறையாக வருகிறது 10 வழி சாலை; அதுவும் தமிழகத்தில்.. என்னென்ன சிறப்பம்சங்கள்! | Tamil Nadus First 10 Lane Green Expressway Details

மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் 10 வழி சென்னை அவுட்டர் சாலையின் பணிகள் இரண்டு கட்டமாக நிறைவடைந்து ஜனவரியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 வருஷ கனவு; கோவை புறவழி சாலை திட்டம் - ஒருவழியாக முடிவுக்கு வந்தாச்சு..

20 வருஷ கனவு; கோவை புறவழி சாலை திட்டம் - ஒருவழியாக முடிவுக்கு வந்தாச்சு..

போக்குவரத்து நெரிசல் 

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கிண்டி கத்திப்பாரா - மணலி இடையே 100 அடி சாலை, இருளியூர் - புழல் இடையே சென்னை புறவழிச்சாலை, வண்டலூர் - மீஞ்சூர் இடையே சென்னை புறவழிச்சாலை உட்பட பல முக்கிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்முறையாக வருகிறது 10 வழி சாலை; அதுவும் தமிழகத்தில்.. என்னென்ன சிறப்பம்சங்கள்! | Tamil Nadus First 10 Lane Green Expressway Details

ரூ.12,301 கோடி செலவில், 10 வழி பாதைகள் (மெயின் சாலை 6 பாதைகள் + இருபுறமும் 2 சேவைப் பாதைகள்) கொண்ட மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய நிலையில் அமைக்கப்படுகிறது.

இந்த ரோட்டில் இரு சக்கர வாகனங்கள் சர்வீஸ் ரோடுகளில் மட்டும் அனுமதிக்கப்படும். மெயின் சாலையில் இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது,​​ கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து 2வது கட்டப் பணிகள் நடைபெறும். மேலும், இங்கு திறக்கப்படும் முதல் 10 வழி சாலையாக இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.