40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு; எவ்வளவு? முழு விவரம் இதோ..
40 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கசாவடிகள்
நாடு முழுவதும் 880க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில் சுமார் 675 சுங்கச்சாவடிகளில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் 78 செயல்பட்டு வருகின்றன.
இந்த கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக் 40 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமான NHAI அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கட்டண உயர்வு
சென்னை, வானகரம், சூரப்பட்டு, சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம் திண்டிவனம் நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடி, செங்கல்பட்டு பரனுர் சுங்கச் சாவடி, பட்டறை பெரும்புதூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளில் இரண்டாம் கட்டமாக வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒவ்வொரு வகை வாகனங்களுக்கு ஏற்ப ஐந்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரை சுங்க கட்டண உயர்வு இருக்கும். கடந்த நிதியாண்டில் மட்டும் 4220 கோடி ரூபாய் சுங்க கட்டணமாக வசூல் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.