ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய 5 நிமிடங்களில் அவர் யார் என எடை போடுகிறார் - பார்த்திபன் புகழாரம்
தமிழ் பண்பாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி பாதுகாத்து வருவதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், உலக காசநோய் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில், காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அதில் பேசிய அவர், தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாத்து வருவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பார்த்திபன் பேச்சு
நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ் கற்று வருகிறார், அவருக்கு புரியும். எனவே நீங்கள் தைரியமாக தமிழிலேயே பேசலாம் என்று சொன்னார்கள்.
அதனால் தமிழ் புத்தகங்களை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிசளித்துள்ளேன். ஒருவர் பேச ஆரம்பித்த 5 நிமிடங்களில் அவர் யார் என ஆளுநருக்கு எடைபோட தெரிகிறது எனத் தெரிவித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் பார்த்திபன் புகழ்ந்து பேசியது கவனம் பெற்றுள்ளது.