நீட் தேர்வு ; தமிழக மாணவர்கள் புறக்கணிப்பு - பாரபட்சம் ஏன்? வலுக்கும் எதிர்ப்புகள்!
நீட் தேர்வில் தொடர்ந்து தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
நீட் தேர்வு
தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வு பல்வேறு தரப்பில் இருந்து இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில், கடந்த வாரம் நடைப்பெற்ற நீட் தேர்வின் போது ராஜஸ்தானில் வினாத்தாள் விநியோகத்தில் ஏற்பட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ராஜஸ்தான் மாணவர்களுக்கு மட்டும் உடனே மறுதேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை, தமிழ்நாட்டு மாணவர்களை கண்டு கொள்ளாமல் துரோகம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மையத்தில் இந்தி மொழியில் தேர்வெழுத வந்திருந்த மாணவர்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் தேசிய தேர்வு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். உரிய நேரத்தில் தேர்வு எழுத முடியாததால், மறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
தமிழக மாணவர்கள்
அதன்படி அவர்களுக்கு உடனடியாக மாணவர்கள் அனைவருக்கும் உரிய வினாத்தாள் வழங்கப்பட்டு மறுபடியும் தேர்வு எழுதினர். அதேபோல தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். அப்போது, மாணவர்களுக்கு இரண்டு விதமான வினாத்தாள்கள் வழங்கப்பட்டது.
இதில் 200 கேள்விகளும் வெவ்வேறாக இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த மாணவர்கள் எழுதியுள்ள வினாத்தாளுக்கான விடைத் தொகுதிகள் மட்டும் வெளியாகவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தங்களுக்கு தனியாக ரேங்கிக் வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அல்லது சரியான கேள்விகளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் ராஜஸ்தான் மாணவர்களுக்கு உடனே செவிசாய்த்த தேர்வு முகாம் தமிழக மாணவர்களுக்கு எதுவும் செய்யவிலை. இதனால் மாணவர்கள் கடும் உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை மௌனம் சாதிப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.