2 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் - இலங்கையில் பறிமுதல்!
தமிழகத்தில் இருந்து கடல் வழியாக 2 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள்
தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக அங்குள்ள சிறப்பு புலனய்யு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது . இதனையடுத்து கல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவலின் அடிப்படையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் ஆட்டோ ஒன்றை சோதனை செய்ததில் 2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. இதனையடுத்து ஆட்டோவில் இருந்த இருவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 18000 ரூபாய் பணம், 2 தொலைபேசியையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல்
கைது செய்யப்பட்ட நபரில் ஒருவர் பிரபல போதை பொருள் வியாபாரி எனவும் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து வேதாரண்யம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் இந்திய உளவுத்துறையினரும், இலங்கை போதை பொருள் தடுப்பு பிரிவினரும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் .