எந்தக் கட்சிக்கு எவ்வளவு ஆதரவு? அதிரடி மாற்றம் - தமிழகத்தின் கருத்துக் கணிப்பு முடிவு!
மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல்
பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மக்களவைத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024இல் யார் இந்திய நாட்டின் பிரதமராக வர விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு,
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று 65 சதவீதம் பேர் , நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று 33 சதவீதம் பேர், மற்றவர்கள்ன் பெயர்களை 2 சதவீதம் பேர் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக் கணிப்பு முடிவு
மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு, 42 சதவீதம் பேர் ஆம் என்றும், 56 சதவீதம் பேர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 42 சதவீதம் பேர்,
அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 30 சதவீதம் பேர், பாஜக கூட்டணிக்கு என்பது 13 சதவீதம், நாம் தமிழர் கட்சிக்கு 8 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாஜக இதற்கு முந்தைய தேர்தல்களில் 3 அல்லது 4 சதவீத வாக்குகளையே பெற்று வந்த நிலையில் இந்த கருத்துக் கணிப்பில் 13 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 7 சதவீத வாக்குகளை பெற்று வந்த நிலையில் இந்த தேர்தலில் 8 சதவீத வாக்குகள் என வளர்ந்து வருகிறது.