பிரதமர் மோடிக்கு சாதகமாக 80% இந்தியர்கள் ஆதரவு - சர்வே ரிசல்ட் இதுதான்..
பிரதமர் மோடிக்கு 80% இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி
அமெரிக்கா, வாஷிங்டன் நகரில் பியூ ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இது லாபநோக்கமற்ற அமைப்பாகும். இது உலக நாடுகளில் சமூக பிரச்சினைகள், பொதுமக்கள் கருத்துக்கள் பற்றி ஆண்டுதோறும் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் அறிக்கைகளை வெளியிடுகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ளார். அதனை முன்னிட்டு பிரதமர் மோடி பற்றி 2,611 இந்தியர்கள் உட்பட 24 நாடுகளைச் சேர்ந்த
இந்தியர்கள் ஆதரவு
சுமார் 31 ஆயிரம் பேரிடம் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மே 11-ம்தேதி வரை கருத்து கணிப்பு நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்தியர்களில் 10-ல் 8 பேர் பிரதமர் மோடி பற்றி சாதகமான கருத்தை கொண்டுள்ளனர்.
55% பேர் சாதகமான கருத்துக்களையும், ஐந்தில்ஒரு பங்கினர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். இந்தியர்களில் 65 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கு சாதகமான கருத்தை தெரிவித்துள்ளனர்.
10-ல்4 பேர் மட்டுமே ரஷ்யாவின் செல்வாக்கு வலுவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் செல்வாக்கு ஒரே மாதிரியாக உள்ளது என 40% இந்தியர்கள் கூறியுள்ளனர்.