விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்திற்குப் பெயர் இனி சிவசக்தி; பிரதமர் மோடி - ஏன் தெரியுமா?
சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சந்திரயான்-3
அரசு முறைப் பயணமாக தென்னாப்ரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி இன்று காலை பெங்களூரு திரும்பினார். இந்நிலையில், சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து,
இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று பெங்களூருவுக்கு வருகை தந்தார். தொடர்ந்து, அங்கு விஞ்ஞானிகளை பாராட்டியதுடன், அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
சிவசக்தி
அப்போது, "நீங்கள் தேசத்தை எந்த அளவுக்கு உயரத்துக்கு அழைத்துச்சென்றுள்ளீர்கள் என்றால், இது சாதாரணமானது அல்ல. இந்தியா நிலவில் கால் வைத்துள்ளது. நம் நாட்டின் கவுரவத்தை நிலவில் நாம் நிலைநாட்டியுள்ளோம்.
விண்வெளி துறையின் சாதனைகள், பங்களிப்பு இளைஞர்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது. நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என்ற பெயரில் அழைக்கப்படும்.
இமயம் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்களை இணைக்கின்ற பெயராக இது இருக்கும். இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியும் கூட. சந்திரயான்3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சாட்சி எனத் தெரிவித்துள்ளார்.