வேலு நாச்சியார் முதல் ஒளவையார் வரை - தமிழ்நாடு அலங்கார ஊர்தியின் சிறப்பு!

Tamil nadu Delhi
By Sumathi Jan 26, 2023 06:14 AM GMT
Report

சமூக மாற்றத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாடு 

தமிழ்நாட்டின் சார்பில் இந்த ஆண்டு பங்கேற்ற அலங்கார ஊர்தி, சங்க காலம் தொட்டு சமூக வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சமூக மாற்றத்துக்கு உதவிய பெண்கள் வழங்கிய பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேலு நாச்சியார் முதல் ஒளவையார் வரை - தமிழ்நாடு அலங்கார ஊர்தியின் சிறப்பு! | Tamil Nadu Republic Vehicle

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தனை இயற்றிய ஒளவையார், கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக தீரத்துடன் போரிட்ட வீர மங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் அலங்கார ஊர்தியின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

அலங்கார ஊர்தி

மையப்பகுதியில் கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, பரத நாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி, அந்தக்காலத்திலேயே மருத்துவர்களாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மையார், 105 வயதிலும் வேளாண் துறையில் சாதித்து வரும் பாப்பம்மாள் ஆகியோரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

ஊர்தியின் பின்பகுதியில் சோழப்பேரரசர் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலின் மாதிரி வடிவம் நிறுவப்பட்டுள்ளது. அலங்கார ஊர்தியுடன் கொம்பு மேளம், நாதஸ்வரம், தவில் வாசித்தபடி இசைக்கலைஞர்கள் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காத வகையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாசாரம், சமூக மாற்றத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி இடம்பெற்றுள்ளது.