தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியில் ஹிந்திக்கு முக்கியத்துவம்? வெடித்த சர்ச்சை
தமிழ்நாடு அரசு அரசின் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு என்ற வார்த்தை ஹிந்தியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளதாகவும், தமிழில் எழுதப்படவில்லை என்றும் பொய்யான குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு
கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட பாரதியார், வ.உ.சி, வேலுநாச்சியார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்கள் தாங்கிய அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் நிராகரித்திருந்தது. தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது சர்ச்சை கிளம்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழ்நாடு முழுவதும் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது .இந்த ஆண்டு மத்திய அரசு, பரிந்துரை செய்த பெண் வலிமை என்ற கருத்துருவை தமிழக அரசு தங்களின் ஊர்திக்காக தேர்வு செய்தது.
அலங்கார ஊர்தி
இதன்படி, தஞ்சை கோவில் பின்னணியில், தமிழக பெண் பிரபலங்களான, அவ்வையார், வேலு நாச்சியார், தஞ்சை பாலசரஸ்வதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் ஆகியோரின் சிலைகளோடு, இயற்கை விவசாயி பாப்பம்மாள் என்பவரது சிலையும் தமிழ்நாடு அரசின் ஊர்தியில் இடம் பெற்றுள்ளன.
இதன் பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில், நடந்த ஒத்திகை அணிவகுப்பில், இந்த ஊர்தி இடம்பெற்றது. இதன் முன்பகுதியில் ஹிந்தியில் தமிழ்நாடு என்ற பெயர் பலகை இடம் பெற்று இருந்தது. ஆனால், ஊர்தியின் முன்பக்கத்தில் ஹிந்தியிலும், பின்பக்கத்தில் ஆங்கிலத்திலும், இரண்டு நீளமான பக்கவாட்டு பகுதிகளில் தமிழிலும் பெயர் பலகைகள் உள்ளன.
சர்ச்சை
டெல்லியில் நடந்த ஒத்திகை அணிவகுப்பில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்ற வாகனத்தின் முன் பகுதியில் தமிழ்நாடு என்ற பெயர் ஹிந்தியில் மொழிப்பெயர்பு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தது போன்ற புகைப்படம் வெளியானது.
இந்த நிலையில் அந்த வாகனத்தின் இடது மற்றும் வலது புறத்தில் தமிழ்நாடு என்று தமிழ் மொழியில் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊர்தியின் பின்புறத்தில் ஆங்கிலத்திலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஊர்தியில் இந்தி மட்டும் இடம்பெற்றிருப்பதாக வெளியான செய்தி என்பது வதந்தி என தெரியவந்துள்ளது.