ரூ.1000 ரொக்கம் வழங்காதது ஏன்? இதுதான் காரணம் - மக்கள் ஏமாற்றம்!
தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு
பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து மக்களுக்கும் தமிழக அரசு சார்பில்
பச்சரிசி, வெல்லம், கரும்பு கொண்ட பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2025 பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம் பெற்றிருக்கும் என்பதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ வெல்லம் மற்றும் ஒரு கரும்பு வழங்கப்படும்.
ரூ. 1000?
மேலும் பொதுமக்களுக்கு வழங்க இலவச வேஷ்டி மற்றும் சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் பணம் இடம்பெறவில்லை.
இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். மகளிர் உரிமை தொகை, புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது.
இதனால் நிதி நெருக்கடி அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டே அரசு இந்த முறை பொங்கலுக்கு ரொக்க பரிசு கொடுக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.